சென்னை: தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் (மே7) ஓராண்டு முடிவடைகிறது. இதனிடையே, ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி இன்று (மே7) சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் அரசின் சாதனைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "மாநகராட்சி, நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் உருவாக்கப்படும். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளர் மற்றும் ஒரு உதவியாளர் பணியமர்த்தப்படுவர்.
காலை 8 மணி முதல் மதியம் 11மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த மருத்துவமனைகள் செயல்படும்" என்றார்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தபின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாகக் கெட்டு விட்டது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட பணிகளுக்குத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் திறப்பு விழா காண்கிறார். இந்த ஓராண்டு ஆட்சியில் எந்தப் புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு தெரிவிக்கிறேன். காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க அதற்கு ஒரு திட்டத்தைத் தீட்டி பிரதமரிடம் வழங்கியதன் அடிப்படையில் நடந்தாய் வாழி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்குப் பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் அதிக அளவில் இழப்பீடு பெற்று தந்தது அதிமுக அரசு. 6 மாவட்டங்கள், 7 கோட்டங்கள், 27 வட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரம், அதிலும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு, தாலிக்கு தங்கம் என்னும் அற்புதமான திட்டத்தை ஏழை எளிய குடும்பத்தினை சேர்ந்த பெண்கள் கல்வியை ஊக்குவிக்க அறிவித்து செயல்படுத்தியது அதிமுக அரசு, கரோனோ காலத்திலும் அதிக தொழில் மூதலிட்டை ஈர்த்தது அதிமுக அரசு" எனக் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு ரத்து குறித்து சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது அறிவித்தார்கள். முதல் கையெழுத்தால் ரத்து என்பது பச்சை பொய். நீட் தேர்வு கொண்டு வந்ததும் திமுக தான், ரத்து செய்வதாக நாடகம் போடுவதும் அவர்கள் தான், ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் மினி கிளினிக் கொண்டு வந்தது அதிமுக அரசு.
அவர்களுக்கு மருத்துவம் அளிப்பது கூட இன்றைக்கு இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்தது அதிமுக அரசு, சென்னை மாநகரில் குற்றங்களைத் தடுக்க சிசிடிவி பொருத்தி உள்ளோம் எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசிய அவர், அதிக அளவிலான சாலைகளை விரிவாக்கம் செய்து, தரமான சாலைகளை அமைத்து கொடுத்தோம். அதிக அளவிலான தார்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் கட்டினோம், ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் மருத்துவ கனவை 7.5% இட ஒதுக்கீடு மூலம் நிறைவேற்றியது அதிமுக அரசு, இப்படி பல்வேறு பெரிய திட்டங்களை நிறைவேற்றி சாதனை மேல் சாதனை படைத்தது அதிமுக அரசு.
ஓராண்டு சாதனையை வெளியிட்டுள்ளார், மக்கள் வேதனை மேல் வேதனை படுகின்றனர். அவர்கள் செய்தது சாதனை அல்ல வேதனை. நாட்டிலேயே எங்கும் தயாரிக்க முடியாத வகையில் ஒழுகும் வெல்லத்தை மக்களுக்கு பொங்கல் தொகுப்பில் கொடுத்தனர். விஞ்ஞான முறைப்படி பொங்கல் தொகுப்பு கொடுத்த திமுக அரசு, வரலாற்றிலேயே யாரும் கொடுக்க முடியாத பொங்கல் பரிசு வழங்கினார்.
பெண்களுக்கு இலவச பயணத்தில் அறிவிப்பு ஒன்று செய்வது ஒன்று, தேர்தல் நேரத்தில் ஒரு அறிவிப்பு தேர்தல் முடிந்த பின் அறிவிப்பு. மாதந்தோறும் கேஸ் மானியம் 100 ரூபாய் இதுவரை வழங்கவில்லை. ஒரீரு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு 60% நிறைவேற்றியதாகக் கூறி வருகிறார்கள். 10 ஆண்டுகளாக தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு, இன்று மீண்டும் மின்வெட்டு நிலவி வருகிறது" என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, இன்றைய 110 விதியின் கீழ் அறவிக்கப்பட்டது. யானைக்கு சோளப் பொறி போன்றது, எங்களை தான் பின்பற்றுகிறார்கள், அவர்கள் சொந்தமாக எதுவும் அறிவிக்கவில்லை. 100க்கு 30% பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகள் இருக்கும் சூழலில் மற்ற பேருந்துகளில் கட்டணம் செலுத்தி தான் பயணிக்கின்றனர்.
குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் அடுத்த நான்கு ஆண்டுகளிலும் வழங்க மாட்டர்கள். அடுத்த ஆண்டு அடுத்த ஆண்டு என சொல்லி கொண்டே நான்கு ஆண்டை கடத்தி விடுவார்கள்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து அதிமுகவினர் இன்றைய பேரவை நிகழ்வுகளில் முழுவதும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு