அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் வெற்றிபெற்று ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல, கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர்களது வெற்றிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "அமெரிக்காவின் 46ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு வாழ்த்துகள்.
அதேபோல அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெரும் மகிழச்சி. இந்த வெற்றியால் அவர் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், பெண்களின் சக்தியை நிரூபித்துள்ளார். உலகை வெல்லும் மனநிலையுடன் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணின் வலிமையை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். உங்கள் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'நான் முதல் பெண் துணை அதிபராக இருக்கலாம்; ஆனால்...' - கமலா ஹாரிஸ்