தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வெள்ளை அறிக்கை பெயரில் வெற்று அறிக்கை' - ஓபிஎஸ்-ஈபிஎஸ் காட்டம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நீட் தேர்வை ரத்து செய்யாததைக் கண்டித்தும், வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் கூறி சட்டப்பேரவையின் முதல் நாளில் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

ops
ஓபிஎஸ்-ஈபிஎஸ்

By

Published : Aug 13, 2021, 1:59 PM IST

திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர் நடைபெறும் முதல் இ-பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஆக.13) கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் திமுக அரசின் தொலைநோக்குத் திட்டங்களை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து வருகிறார்.

பட்ஜெட் தாக்கலுக்கு முன் பேச வாய்ப்பு கேட்டு அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். நிதியமைச்சர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடிக்கட்டும். பின்னர், உரிய நேரத்தில், அனைவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறிய போதிலும், அதிமுகவினர் அதைப் புறக்கணித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை ஓ.பி.எஸ்.,ஈ.பி.எஸ் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, " 505க்கும் மேற்பட்ட நடைமுறைப்படுத்த முடியாத அறிக்கைகளை கூறி திமுக ஆட்சிக்கு வந்தார்கள். வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு விளக்கு தான் என்றனர்.

ஆனால் 100 நாள்கள் ஆகியும் அதுகுறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. மாணவர்களுக்கு தெளிவான அறிவுரையை வழங்காமல், குழப்பத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளனர்.

நீட் தேர்வு ரத்து செய்யாததைக் கண்டித்தும், வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்துள்ளோம். 2006-2011இல் திமுக ஆட்சிக் காலத்தில் செய்ததை தான் அதிமுக அரசும் செய்தது. ஆனால் தற்போது தவறு என்று கூறுகின்றனர்.

பொய்யான வழக்குகளைக் கண்டு அஞ்ச மாட்டோம்

உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் சமயத்தில் இவ்வாறான சோதனைகள் செய்து கழகத் தொண்டர்களை திசைத் திருப்பும் நோக்கம் வெற்றி பெறாது. பொய்யான வழக்குகளைக் கண்டு அஞ்ச மாட்டோம். சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

ஓ.பி.எஸ்.,ஈ.பி.எஸ் செய்தியாளர் சந்திப்பு

’நமது அம்மா நாளிதழ்’ அலுவலகத்தில் திமுக அரசினர் நடத்தியது அராஜகம். இதனால் பத்திரிகையை அடுத்த நாள் அச்சிட முடியவில்லை. திமுக அரசு பத்திரிகை சுதந்திரத்தை பறித்துள்ளது.

அரசின் காழ்புணர்ச்சி

திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த நிதித்துறை செயலாளர் தான் அதிமுக ஆட்சிக் காலத்திலும் இருந்தார். அப்படி இருக்கையில் எப்படி அது தவறாகும். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது சோதனை என்பது அரசின் காழ்புணர்ச்சி காரணமாக என்பது தான் உண்மை.

அதிமுகவிற்கு தேர்தலில் கோவையில் 100 விழுக்காடு வெற்றி தேடித்தந்தவர் எஸ்.பி.வேலுமணி. அப்படி இருக்கையில் அவர் மீது சுமத்தப்பட்ட புகார்களை சட்டரீதியாக எதிகொள்வோம்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஓ பன்னீர்செல்வம், "வெள்ளை அறிக்கைக்கு உரிய பதிலை நான் சட்டப்பேரவையில் தருவேன். ஏற்கனவே நான் பத்து ஆண்டுகள் இருந்த போது சொன்னதையும் சொல்லாதையும் ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி மேலாண்மையையும், விவரமாகவும் விரிவாகவும் சட்டப்பேரவையில் உரிய நேரத்தில் தெரிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:’பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது ஒன்றிய அரசின் கடமை’ - பிடிஆர்

ABOUT THE AUTHOR

...view details