மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்தநாள் இன்று (ஜன 17) தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. அரசியல் தலைவர்கள் அவரது உருவ சிலைக்கும், புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலை, உருவப்படம் ஆகியவை அலங்கரிக்கப்பட்டிருந்தது.