தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் மெய்யநாதன்

’ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். கடற்கரைகளில் பசுமையான சூழலை உருவாக்குவதோடு, சிறப்பு வல்லுநர் குழு அமைத்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கந்தகப் பொருட்கள் உள்ளதா என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

environment-minister-meyyanathan-say-we-will-not-allow-hydrocarbon-project-in-tamil-nadu ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் OR நிலத்தடி நீரில் கந்தகப் பொருட்கள் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை : அமைச்சர் மெய்யநாதன்
environment-minister-meyyanathan-say-we-will-not-allow-hydrocarbon-project-in-tamil-naduஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் OR நிலத்தடி நீரில் கந்தகப் பொருட்கள் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை : அமைச்சர் மெய்யநாதன்

By

Published : Apr 29, 2022, 3:42 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரம் இன்று (ஏப். 29) காலை 10 மணிக்குத் தொடக்கி நடைபெற்றது. அதில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். இதனிடையே, வினாக்கள் விடைகள் நேரத்தில், சீர்காழி தொகுதியின் உறுப்பினர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

பிறகு பேசிய அவர், கிராமங்களின் நிலத்தடி நீரில் கந்தகப் பொருட்கள் கலப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், ’சீர்காழி தொகுதியில் நிலத்தடி நீர் பகுப்பாய்வு மேற்கொண்டதில், கந்தகப் பொருட்கள் கலப்படம் இல்லை என தெரியவந்துள்ளதாகவும், இருப்பினும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்’ என்றும் குறிப்பிட்டார்.

மேலும், ’இதுபோன்ற பணிகளைக் கண்காணிக்கவே தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தைத் முதலமைச்சர் உருவாக்கி உள்ளார் எனக் கூறிய அவர், 14 மாவட்டங்களில் 500 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள கடற்கரைகளில் பசுமையான சூழலை உருவாக்குவதோடு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு வல்லுநர் குழு அமைத்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கந்தகப் பொருட்கள் உள்ளதா என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும்’ எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details