தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலநிலை மாற்றம் இயக்கத்தைத் தொடங்க தீர்மானம் - சுற்றுச்சூழல் துறை - சென்னை அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையின்கீழ் 'தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை' தொடங்க அரசு தீர்மானித்திருப்பதாக இன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Sep 3, 2021, 3:57 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி திருத்திய வரவு-செலவு அறிக்கையினைத் தாக்கல்செய்தது. வருகின்ற 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளில் அறிவிக்கப்பட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.

சவாலாகும் காலநிலை மாற்றம்

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 3) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில், "தமிழ்நாடு போன்ற கடலோர மாநிலத்திற்கு, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதும், தணிப்பதும் பெரும் சவாலாக உள்ளது. 2021-2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, காலநிலை மாற்றங்கள் மற்றும் கணிப்பு நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக, முதலமைச்சர் தலைமையின்கீழ் 'தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை' தொடங்க அரசு தீர்மானித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நீலக்கொடி சான்றிதழ் திட்டம் - கடற்கரைகள் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details