சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 13) நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கை சூழலியல் பார்வையில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பை வரவேற்பைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள், உலக பன்னாட்டு அமைப்பு வெளியிட்ட அறிக்கை, சுவாமிநாதன் அறக்கட்டளையில் 'காலநிலை மாற்றம் தான் மானுடத்தின் பெரும் சவால்' என்று முதலமைச்சர் ஸ்டாலினின் உரை என அடுத்தடுத்த நிகழ்வுகளின் பின்னணியில் காலநிலை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்றைய நிதிநிலை அறிக்கையில் வந்துள்ளது.
பசுமை இயக்கம்
முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு 'காலநிலை மாற்ற இயக்கம்' 500 கோடியில் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்படும் என்கிற அறிவிப்பு காலத்தின் மிக முக்கியமான தேவை. வரக்கூடிய காலங்களில் காலநிலை மாற்றத்திற்கு என ஒதுக்கப்படும் நிதியாதாரங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என்று நம்புகிறோம்.
வனத் துறை, ஆளில்லா விமானங்கள், நவீன தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, புவிசார் தகவல் அமைப்பு உள்ளிட்டவற்றை கொண்டு நவீனமாக்கப்படும் என்கிற அறிவிப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, அதுவும் காடுகள் இயற்கையில் உள்ள 'கார்பன் சிங்க்', அவற்றை பாதுகாப்பது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு உதவும்.
மேலும் கரோனா போன்ற பெருந்தொற்று பரவுவதற்கு காடுகள் அழிக்கப்படுவதுதான் முக்கியமான காரணம் என்று உயிரியலாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 விழுக்காடு அதிகரிப்பதற்கு மக்கள் பங்களிப்புடன் இந்த மண்ணிற்கு ஏற்ற மரங்களை நடுவதற்கு 'பசுமை இயக்க' அறிவிப்பும் இதற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் பூவுலகு போன்ற அமைப்புகளுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.
புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களைப் பயன்படுத்துக