தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு! - கல்பனா சாவ்லா விருது

சென்னை: கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

kalpana chawla

By

Published : May 30, 2019, 1:36 PM IST

துணிவு, வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ. 5 லட்சத்திற்கான காசோலையும், ஒரு பதக்கமும் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த, துணிச்சலான, வீர சாகச செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெற தகுதியுள்ளவர் ஆவர். 2019ஆம் ஆண்டு கல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்க, விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள், ஆவணங்களுடன்,

அரசு முதன்மைச் செயலாளர்
பொதுத் துறை
தலைமைச் செயலகம்
சென்னை - 600009 என்ற முகவரிக்கு ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர்.

ABOUT THE AUTHOR

...view details