சென்னை: குன்றத்தூர் அடுத்த மணிகண்டன் நகரின் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாலகிருஷ்ணன்(19) குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் தனது மனைவிடம் தகராறு செய்து கொண்டு இருந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, இன்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபாகரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குத்தி கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். இந்த கத்தியை பிடுங்கிய மகன் பாலகிருஷ்ணன், உங்களது தொடர் சண்டையால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று கூறி உடனேயே தனது மார்பில் வேகமாக குத்திக் கொண்டுள்ளார். அதன்பின் அங்கேயே மயங்கமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.