தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு: மாற்றுத்திறனாளிகளுக்கு 20% கூடுதலாக வழங்க உயர் நீதிமன்றத்தில் மனு!

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகை 2,500 ரூபாயுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 விழுக்காடு கூடுதலாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

Enhanced subsidy for disability as per rules, petition moved, MHC
பொங்கல் பரிசு: மாற்றுத்திறனாளிக்கு 20 விழுக்காடு கூடுதலாக வழங்க உயர் நீதிமன்றத்தில் மனு

By

Published : Dec 30, 2020, 6:10 AM IST

சென்னை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பொருள்களுடன் தலா 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்துள்ளார்.

இந்தப் பொங்கல் பரிசுத் தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 25 விழுக்காடு கூடுதலாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் அதன் மாநிலப் பொதுச்செயலாளர் நம்புராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் அந்த மனுவில், "சமூக நலத் திட்டங்கள் மற்றவர்களுக்கு வழங்கும் மானியத்தைவிட மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25 விழுக்காடு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 கூறுகிறது. எனவே, சட்டத்தின்படி 25 விழுக்காடு மானியம் கூடுதலாக வழங்க வேண்டும்.

இது தொடர்பாக கடந்த ஜனவரி 22ஆம் தேதி, பிப்ரவரி 5ஆம் தேதிகளில் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்த 2,500 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையுடன் கூடுதலாக 25 விழுக்காடு வழங்கவும், அதை மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், அனிதா சுமந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க:பெண் ஊழியர் பணிநீக்கம்! - ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க லயோலா கல்லூரிக்கு ஆணை!

ABOUT THE AUTHOR

...view details