அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி - english medum in government aided schools
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவுகளில் தொடங்குவதற்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்கலாம் என தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள கடிதத்தில், "மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசாணை எண் 101 இன் படி சில அதிகாரப் பகிர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதத்தில், சுயநிதி பள்ளிகள், அரசு நிதி உதவி பகுதி நிதியுதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு ஆங்கில வழிப் பிரிவுகள் அனுமதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் சுயநிதி,நிதியுதவி, பகுதி நிதியுதவி பெறும் பெறும் தொடக்க நடுநிலை பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளியை ஆய்வு செய்து அனுமதி வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு பள்ளியில் நான்கு பிரிவுகள் இருந்தால் இரண்டு பிரிவுகள் தமிழ் வழிபாடு பிரிவாகவும், இரண்டு பிரிவுகள் ஆங்கில வழி பாடப் பிரிவாகவும் செயல்பட அனுமதி வழங்கலாம்.
ஒரு பள்ளியில் மூன்று பிரிவுகள் இருந்தால் இரண்டு பிரிவுகள் தமிழ்வழிப் பிரிவாகவும், ஒரு பிரிவு ஆங்கிலவழி பிரிவாகவும் செயல்பட அனுமதி வழங்கலாம் எனவும், ஒரு பிரிவு மட்டும் செயல்பட்டால் அது தமிழ்வழிப் பிரிவாகவே செயல்பட வேண்டும்" என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க : நீட் விலக்கு விவகாரம்: ஆளுநரைச் சந்திக்கும் ஸ்டாலின்