தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் பட்டம், பட்டயம் முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - பொதுப்பணித்துறை

சென்னை: பொறியியல் பட்டம், பட்டயம் முடித்த மாணவர்கள், பொதுப்பணித் துறை சார்பில் ஓராண்டுப் பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Oct 3, 2020, 11:32 PM IST

தமிழ்நாட்டில் 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சிவில், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் ஆகிய துறைகளில் பொறியியல் பட்டம், பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்குப் பொதுப்பணித் துறை சார்பில் ஓராண்டுப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு, பொதுப்பணித் துறை, தொழிற்பழகுநர் வாரியம் (தென் மண்டலம்) ஒத்துழைப்புடன், 2017, 2018, 2019, 2020 ஆகிய வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து பட்டம், பட்டயம் (Civil, EEE & ECE) ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுநர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்கப்படுகின்றன.

மேலும், விவரங்களுக்கு www.boat-srp/com என்னும் இணையதள முகவரியினைக் காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) பெற கடைசி நாள் நவம்பர் 15ஆம் தேதி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details