சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளில் பருவத்தேர்வில் மாணவர்களுக்கு வரும் 18ஆம் தேதி செய்முறைத் தேர்வுகளும், 28ஆம் தேதி செமஸ்டர் எழுத்துத் தேர்வும் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எம்.இ, எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ படிப்புகளில் பயிலும் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் செப்டம்பர் 5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.