சென்னை:தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்க இருந்த பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு, நீட் தேர்வினால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று (செப் 10) தொடங்கியுள்ளது.
இவை நவம்பர் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. கட் - ஆப் 184 முதல் 200 வரை உள்ள 14,524 பேர் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். அதோடு 332 அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.