+2 முடித்த மாணவர்கள் பெரும்பாலும் கலை, அறிவியல், பொறியியல் ஆகியப் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பர். அதனால், +2 பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விநியோகித்தன. ஆனால், பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பங்களை விநியோகிக்காமல் இருந்தன.
பொறியியல் கலந்தாய்வு தேதி இன்று வெளியானது - Engineering counselling date
சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி மற்றும் கலந்தாய்வு குறித்த விபரங்கள் இன்று காலை வெளியானது.
கே.பி.அன்பழகன்
இந்நிலையில், +2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல்19 அன்று வெளியாகின. அதனால், பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பம் விநியோகம் மற்றும் கலந்தாய்வு குறித்து நேற்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், எந்த அறிவிப்பும் வெளியாகமல் இருந்தது.
இந்நிலையில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பிக்கும் தேதி மற்றும் கலந்தாய்வு குறித்த விபரங்கள் இன்று காலை அறிவிக்கப்பட்டது.