அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. மொத்தம் உள்ள 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களில் 71 ஆயிரத்து 195 இடங்களே நிரம்பி உள்ளன என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பொறியியல் பொது கலந்தாய்வு இன்றுடன் நிறைவு - Anna University Engineering Counselling
நிகழாண்டிற்கான பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது.
engineering
இதனைத்தொடர்ந்து துணை கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என உயர்கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் 89 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.
இதையும் படிங்க: 40 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: கல்வியாளரின் கருத்து என்ன?
Last Updated : Oct 28, 2020, 11:12 AM IST