தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தம் - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

சென்னை : பொறியியல் பருவத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகளின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அனைத்து இந்திய தனியார் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

engineering colleges involved in Scandal semester exams result withhelt
முறைகேட்டில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தம்!

By

Published : Feb 19, 2020, 9:37 PM IST

பொறியியல் பருவத் தேர்வு முறைகேடு குறித்து அனைத்து இந்திய தனியார் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவர் கார்த்திக் கூறியதாவது, ‘அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சிவில் துறையில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.

பருவத் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான அறிவிப்பு அட்டவணை.

கடந்தாண்டு நவம்பரில் நடந்த தேர்வு முடிவுகள் எங்களுக்கு மட்டும் WH1 எனவும், அனைவரும் முறைகேடு செய்ததாக பல்கலைக்கழக வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கல்லூரி முதல்வர் பாடம் நடத்திய 'புளூயிட் மெக்கானிக்ஸ்' (CE8302 Fluid Mechanics) தேர்வு விடைத்தாளை அவர் தேர்வுக்கு முன்னதாகவே அளித்து, சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு சொல்லி அவர்களை தேர்வுக்கு தாமதமாக வருவதற்கு அனுமதித்து உள்ளதாகவும் தெரிகிறது.

பருவத் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான அறிவிப்பு அட்டவணை.

இது குறித்து விசாரணை செய்த அண்ணா பல்கலைக்கழகம், தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த விசாரணையை கல்லூரி முதல்வர் பணப்பலத்தை வைத்து சரி செய்ய முயற்சிக்கிறார்.

இந்த இழுபறியில் எந்த தவறும் செய்யாத மாணவர்கள் மீது பழியை சுமத்தி இருக்கின்றனர். இது குறித்து கல்லூரி நிர்வாகம் பெற்றோர்களுக்கு எந்தத் தகவலும் கூறாமல் உள்ளது. படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், இதனால் மிகுந்த மனபாதிப்புக்கு உள்ளாகி படிக்கும் நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

இப்புகார்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் சென்றுள்ளது. பல்கலைக்கழகமானது, இதுவரை இந்த முதல்வர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அந்த வகுப்பில் உள்ள 35 மாணவருக்கும், அனைத்து பாடங்களிலும் பருவத் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. அதற்கான காரணமாக, WH1 - withheld for malpractice என்று குறிப்பிட்டிருக்கிறது என்றார்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘பொறியியல் மாணவர்களுக்கான பருவத் தேர்வின்போது, சில தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

எனவே, அது போன்ற முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் தேர்வெழுதிய பாடப்பிரிவுகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஆய்வு செய்த பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் மீது ஏற்கெனவே பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :'சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை அமைதியாக நடத்த குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்' - டி.ஆர். பாலு

ABOUT THE AUTHOR

...view details