தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - engineering college

சென்னை: பொறியியல் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.

மங்கத் ராம் சர்மா

By

Published : May 24, 2019, 10:42 PM IST

உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, 'பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதிலும், கிராமப்புறங்களில் இருந்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதிலும் படிப்பதிலும் சிரமப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் உள்ள நவீன இயந்திரங்கள் குறித்து பேராசிரியர்களும் அறிந்து கொள்ள தேவையான பயிற்சியும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் சான்றிதழ் சரிபார்ப்பின் போது எளிதில் உதவுவதற்காக ஒரு துணை ஆட்சியர், 2 தாசில்தார்கள் அனைத்து சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களில் இந்த ஆண்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுப்பதற்காக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

புகார்கள் வந்தால் எவ்வித பாரபட்சமின்றி மாணவர்களின் நலன் கருதி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details