சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சென்னையிலுள்ள விப்ரோ என்ற மென்பொருள் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 2012ஆம் ஆண்டு பூந்தமல்லியிலுள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது உடன் படித்த மாணவியை காதலித்துள்ளார். மாணவியும் மகேஸ்வரனை காதலித்திருக்கிறார். இதன் பின்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கல்லூரியை விட்டு இருவருமே பிரிந்து சென்றுள்ளனர்.
இதன் பின்பு கல்லூரி வாழ்க்கையை முடித்த மாணவிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் ஆகி இரண்டு வயதில் குழந்தை உள்ளது. திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே அந்தப் பெண் கணவரை விட்டு பிரிந்துள்ளார். இதன் பின்னர் சமூக வலைதளங்கள் வழியாக மகேஸ்வரன் அந்த பெண்ணை தொடர்புகொண்டு பேசி, பழகி வந்துள்ளார்.
அந்தப் பெண்ணும் அவருடன் நன்றாக பேசி பழகியுள்ளார். பின்னர், அந்தப் பெண் கணவரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழ்ந்து வருவதை தெரிந்துகொண்ட மகேஸ்வரன், பெண்ணிடம் சற்று அதிகமாகவே நெருக்கம் காட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தனியாக வாழ்ந்து வருவதால் தனது ஆசைக்கு பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறார். அதற்கு அந்தப் பெண் தரப்பிலிருந்து மறுக்கப்படவே எப்படியாவது அந்த பெண்ணை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைக்க திட்டம் தீட்டியுள்ளார்.