தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 6, 2022, 2:42 PM IST

ETV Bharat / state

டிடிவி தினகரன் இரட்டை இலை வழக்கு: வழக்கறிஞர் தற்கொலை

இரட்டை இலை சின்னம் பெற டிடிவி தினகரன் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலையால் உயிரிழந்துள்ளார்.

டிடிவி தினகரன் இரட்டை இலை வழக்கு
டிடிவி தினகரன் இரட்டை இலை வழக்கு

சென்னை:சென்னையை அடுத்த திருவேற்காடு, சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் 31 வயதான கோபிநாத். பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த இவர், நேற்றிரவு (ஏப். 5) தூங்க செல்வதாக கூறி, வீட்டின் எதிரே உள்ள குடிசைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று (ஏப். 6) காலை 6.30 மணியளவில் கோபிநாத்தின் தங்கை சென்று பார்த்த போது, கோபிநாத் தற்கொலையால் உயிரிழந்தது தெரியவந்தது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திருவேற்காடு காவல்துறையினர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு, இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, டிடிவி தினகரன் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதை அடிப்படையாக கொண்டு, அமலாக்கத்துறை வழக்கு பதிந்து சுகேஷ் சந்திராவை கைது செய்து விசாரணை நடத்தியது.

இந்த விவகாரத்தில் உயிரிழந்த வழக்கறிஞர் கோபிநாத்தின் சீனியர் வழக்கறிஞரான ராமாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை அமலாக்கத்துறை குற்றவாளியாக சேர்த்தது. இந்நிலையில், வழக்கறிஞர் மோகன்ராஜின் ஜூனியர் என்பதால், கோபிநாத் வீட்டிலும், கடந்த 2017ஆம் ஆண்டு அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, நேற்று மாலை, கோபிநாத்தை செல்போனில் தொடர்பு கொண்ட அமலாக்கத்துறையினர், விசாரணைக்கு டெல்லி வருமாறு தகவல் கூறியதாகவும், இதனால் மன வேதனையில் இருந்த கோபிநாத் தற்கொலையால் உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details