சென்னை:பொதுமக்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பல்லாயிரம் கோடி ரூபாயை ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎப்எஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் ஏமாற்றி உள்ளது. இந்த நிறுவனங்களின் மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆருத்ரா நிறுவனம் சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேரிடமிருந்து முதலீடாக 2,438 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது போலீசார் செய்துள்ளனர். மேலும் ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர்.
இதே போல ஐஎஃப்எஸ் நிறுவனம் சுமார் 80,000 பேரிடமிருந்து 4,000 கோடி ரூபாயை முதலீடாக பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஹிஜாவு நிறுவனமும் இதே போன்று பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று சுமார் 4,000 கோடிக்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.