தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Ed raid: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Enforcement Directorate raids at Popular Front of India executive house in Chennai
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

By

Published : Jul 27, 2023, 2:58 PM IST

Ed raid: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, ஐந்து வருடத்திற்கு செயல்பட மத்திய அரசு தடை விதித்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கிளைகளின் நிர்வாகிகள் அலுவலகங்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கூறி, தேசியப் புலனாய்வு அமைப்புகள் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்து வருகின்றன.

இந்நிலையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பான இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து மத்திய அரசுக்கு தெரியாமல் நிதியானது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பான நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு கிடைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர், தொடர்ந்து இந்தச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சில இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பும் அமலாக்கத் துறையும் இணைந்து இந்த சோதனைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சென்னை வேப்பேரியில் உள்ள தக்கர் தெருவில் சையது அபுதாகிர் என்பவரது வீட்டில் வசித்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் மாநிலத் தலைவர் இஸ்மாயில் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு வாகனங்களில் வந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று, பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் உள்ள துரப் என்பவர், தொடர்பான வீட்டில் சோதனை மேற்கொண்டு, அங்கிருக்கும் நபர் ஒருவரை, ஜோதி வெங்கடாசலம் தெருவில் இருக்கும் இஸ்மாயில் அக்ஸர் என்ற விடியல் பத்திரிக்கை ஆசிரியர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு வாகனங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மாநிலத் தலைவராக இருக்கும்பொழுது அமைப்பிற்கு வந்த நிதிகள் தொடர்பாக ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சென்னையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் மற்றும் இஸ்மாயில் வீடுகளில் சோதனை மேற்கொண்டு ஆவணங்களைப் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எவ்வளவு நாள்தான் தொழிலாளியாகவே இருப்பது? வேலை கொடுத்தவரிடமே வேலையைக் காட்டிய ஓட்டுநர் கைது!

ABOUT THE AUTHOR

...view details