சென்னை: சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் சங்கர். இவர் நேற்று (மே.18) தனது வழக்கறிஞருடன் சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத்துறை சென்னை மண்டல அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை துணை இயக்குநர் மல்லிகா அர்ஜுனா முன் இயக்குநர் சங்கர் ஆஜரானார்.
அதன் பின்னர் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டின் ஒன்றின் அடிப்படையில்சங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அது என்ன வழக்கு என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இயக்குநர் சங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 மணி நேர விசாரணை இயக்குநர் சங்கர் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்காக இயக்குநர் சங்கர் ஆஜராகி உள்ள தகவல் அறிந்து ஊடகத்தினர் ஒளிப்பதிவாளர்கள் அதிகளவில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கூடினர்.
இயக்குநர் சங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை விசாரணைக்காக சங்கர் தனது இன்னோவா காரில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார். விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களின் கண்ணில் படாமல் இருக்க அமலாக்கத்துறை அலுவலகத்தின் பின்வழியாக வாடகை காரில் சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: மருமகனால் பஞ்சாயத்து - திடீரென திருமண வரவேற்பை நிறுத்திய ஷங்கர்!