தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமலாக்கத்துறை திடீர் சோதனை - அமைச்சர் செந்தில் பாலாஜி ரியாக்‌ஷன் என்ன? - chennai government green house

வருமான வரித்துறை சோதனைக்கு கொடுக்கப்பட்டதை போல அமலாக்கத்துறையின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

tamilnadu electricity minister
சென்னை பசுமை இல்லம்

By

Published : Jun 13, 2023, 5:29 PM IST

Updated : Jun 13, 2023, 6:22 PM IST

அமலாக்கத்துறை திடீர் சோதனை குறித்த அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்து

சென்னை:அமைச்சர் செந்தில் பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், மது பான பார்களில் சில ஊழல் முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இதன் அடிப்படையில் அவரது உறவினர்கள் ,நண்பர்கள் வீட்டில் என வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் தமிழக அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் வீடுகள் உள்பட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான கரூர் வீட்டிலும், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அரசு இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் காசோலைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: Senthil Balaji ED Raid: செந்தில் பாலாஜி அக்கவுண்ட்டில் என்ன இருக்கு? - விசாரணையில் இணைந்த ஸ்டேட் வங்கி

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலையில் நடைபயணம் மேற்கொண்டு வீடு திரும்பும் போது பசுமை வழி சாலையில் உள்ள அரசு இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "சோதனை நடப்பது குறித்து முதலில் எனக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை என்றும் சோதனை குறித்த தகவல் கிடைத்த பின்னர் நடைப்பயிற்சியை பாதியில் நிறுத்திவிட்டு வேகமாக வாகனம் மூலம் வீட்டிற்கு வந்ததாகவும், எனக்கு தகவல் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் சட்டபடி எனக்கு தகவல் சொல்லவும் மாட்டார்கள் எனக் கூறினார்.

மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் என்ன நோக்கத்தில் தேட வந்துள்ளார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சோதனை முழுவதுமாக முடிவடையட்டும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு நாங்கள் கொடுப்போம் என அவர் கூறினார். ஐ.டியாக இருந்தாலும் சரி இடியாக இருந்தாலும் சரி எந்த சோதனை என்றாலும் முழு ஒத்துழைப்பு அளிக்க நான் தயார்.சோதனையின் முடிவில் எந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் அதற்கு உரிய விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்" என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:90sகிட்ஸ்க்குஅதிர்ச்சி தகவல் - முறைமாமன் வில்லன் காலமானார்..!

Last Updated : Jun 13, 2023, 6:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details