தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாயம், பல்லாங்குழி விளையாட்டுகளை ஊக்குவிப்பதால் மாணவர்களின் கணிதத்திறன் மேம்படும் - தொடக்கக்கல்வித்துறை - students maths skills

தாயம், பல்லாங்குழி விளையாட்டுகளை ஊக்குவிப்பதால் மாணவர்களின் கணிதத்திறன் மேம்படும் என்பதுடன் கூடிய, 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தாயம், பல்லாங்குழி விளையாட்டுகளை ஊக்குவிப்பதால் மாணவர்களின் கணிதத்திறன் மேம்படும் - தொடக்கக்கல்வித்துறை வெளியிட்ட நெறிமுறைகள்!
தாயம், பல்லாங்குழி விளையாட்டுகளை ஊக்குவிப்பதால் மாணவர்களின் கணிதத்திறன் மேம்படும் - தொடக்கக்கல்வித்துறை வெளியிட்ட நெறிமுறைகள்!

By

Published : Jun 30, 2022, 6:51 PM IST

சென்னை:தொடக்கக்கல்வித்துறையில் கரோனா தொற்றினால் ஏற்பட்ட கற்றல் பின்னடைவுகளை சரி செய்வதற்காக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் கொண்டு வரப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான குறைந்தபட்ச செயல்திட்டத்தை தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி வெளியிட்டுள்ளார்.

அதில், “2025 ஆம் ஆண்டிற்குள் 8 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எண்ணறிவையும் எழுத்தறிவையும் பெறும் வகையில், ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தங்களிடம் குழந்தைகள் பயமின்றி இயல்பாக பழகக்கூடிய சூழலை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் என்னென்ன புதுமைகள் வகுப்பறையில் நிகழ இருக்கிறதோ, என்ற எதிர்பார்ப்பில் பள்ளியை நோக்கி வர வேண்டும். எந்தப் பள்ளியில் கடைசி பெல் அடித்தவுடன் மகிழ்ச்சி அடையாமல் வருத்தத்தோடு மாணவர்கள் வெளியே செல்கிறார்களோ, அப்பள்ளியே சிறந்த பள்ளியாக இருக்கும்.

சாப்பிடுவதற்கு முன்: பள்ளிகள் புத்தகங்களைப்போதிக்கும் இடமாக மட்டுமல்லாமல், மாணவர்கள் மகிழ்ச்சியாக அனைத்து செயல்பாடுகளிலும் ஈடுபடவும் பங்கேற்கவும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆசிரியருக்குள் பொதிந்திருக்கும் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளுக்கு வானமே எல்லை.

ஒவ்வொரு நாளும் 'காலை வணக்கக்கூட்டம்' கட்டாயம் திங்கள் கிழமை மட்டும் 17 நிமிடங்களும், இதர நாட்களில் 10 நிமிடங்களும் நடைபெற வேண்டும். இவ்வாறு நடைபெறும் காலை வணக்கக் கூட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் மாணவர்கள் பங்கேற்றிட வேண்டும்.

சாப்பிட்ட பின்: மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஸ்போக்கன் இங்கிலீஷ், பொது அறிவு, செய்தித்தாள் வாசிப்பு உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பின்னர் வாய்ப்பாடு ஒப்புவித்தல், சொல்வதை எழுதுதல், கலை மற்றும் கைவண்ண வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட விளையாடுதல் மிகவும் அவசியம்.

உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியம் சார்ந்த விளையாட்டுகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். கோணிப்பை ஓட்டம், ஓடிப்பிடித்தல், பந்து எறிதல், சறுக்கி விளையாடுதல், ஓட்டப்பந்தயம் ஆகியவற்றை 1 மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், சதுரங்கம், கேரம் ஆகிய விளையாட்டுகளை 3ஆம் வகுப்பு மாணவர்களையும் விளையாட செய்யலாம்.

வீடுகளில் தாயம், பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் கணிதத்திறனை வளர்க்க முடியும். சிறார் நாளிதழ் வாசித்தல், நூலகப் பயிற்சி, கதை, கட்டுரைப் போட்டிகள் உள்ளிட்டவையும் நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் முறைகள் குறித்தும், நடத்த வேண்டிய முறைகள் குறித்தும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்பு மாணவர்களை சேர்க்க தொடக்கக்கல்வித்துறை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details