தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாய்மொழிக்கல்விக்கு ஊக்கமளியுங்கள் - கல்வி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்! - mother tongue education

தாய்மொழிக் கல்விக்கு கல்வி நிறுவனங்கள் ஊக்கமளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : May 27, 2022, 11:11 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பள்ளிக்கரணையில் டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைத்தார். அப்போது உரையாற்றிய அவர் ஒரு மனிதனிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத ஒரு சொத்து எது என்றால், கல்வி என்ற சொத்து தான், யாராலும் பறிக்க முடியாது என்றார்.

ஆன்மிகவாதியாக இருந்தாலும் - மதத்தில் சீர்திருத்தம் பேசியவர் தான் தயானந்தா. மகளிருக்கு சம உரிமை, பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்தக் காலத்தில் இருந்த குழந்தைத் திருமணத்தை கடுமையாக எதிர்த்தவர் தயானந்தா என குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மாணவ, மாணவியரும் உண்மையுடனும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர வேண்டும் எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் அளிப்பவையாக கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்; மிகச்சிறந்த திட்டங்களுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டுப் பற்றும், ஒவ்வொரு மனிதருக்கும் மிக மிக முக்கியம் என்ற வகையில் இந்த வேண்டுகோளை உங்களிடத்தில் நான் வைக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details