சென்னை:அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இயக்கத்தில், கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள "எனக்கு என்டே கிடையாது" திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளதுடன், படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்து உள்ளார்.
எனக்கு என்டே கிடையாது படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும், படத்தில் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தளபதி ரத்னம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கலாச் சரண் படத்திற்கு இசையமைத்து உள்ளார். சந்திரமுகி 2, யாத்திசை உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் ஓம் பிரகாஷ் படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். அக்டோபர் 6 ஆம் தேதி ஆக்சன் ரியாக்சன் சார்பில் ஜெனிஷ் இந்த ப்படத்தை வெளியிடுகிறார்.
இந்நிலையில், படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்காமல், படக்குழுவினர் மட்டும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் கார்த்திக் பேசும்போது, "அடிப்படையில் வழக்கறிஞர் என்றாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் பயிற்சி எடுத்தேன்.
எனக்கு என்டே கிடையாது படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி கடந்த ஏழு வருட தவமாக தற்போது இந்த படத்தை தயாரித்துள்ளேன். இந்த ஏழு வருடங்களில் ஒவ்வொரு முறையும் இந்த படத்தை துவங்க முயற்சிக்கும்போது சில தடங்கல்கள் ஏற்பட்டு முயற்சி தள்ளிப்போனது. ஆனாலும் "எனக்கு என்டே கிடையாது" என்கிற எங்கள் படத்தின் டைட்டிலை எனக்கு நானே சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டேன்.
சமீபத்தில் நடிகர் விஷால் பேசும்போது மூன்று கோடி, நான்கு கோடி வைத்துக்கொண்டு சின்ன படங்களை தயாரிக்கிறோம் என யாரும் வர வேண்டாம் என கூறியிருந்தார். இதுவும் ஒரு விதமான சனாதனம் தான். இப்படி சொல்ல யாருக்குமே உரிமை இல்லை" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் இயக்குநர் விக்ரம் ரமேஷ் பேசும்போது, "நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் இது ஒளிவு மறைவில்லாத ஒரு நிறுவனம். கதையை சொல்வதற்கு முன்பாகவே, இதுதான் பட்ஜெட், நான் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறேன். என்னுடைய நண்பர்களும் இதில் என்னுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என முதலிலேயே கூறிவிட்டேன்.
தயாரிப்பாளரும் எந்த நிபந்தனையும் விதிக்காமல் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், தாமதப்படுத்தாமல் கதை சொன்ன ஒரு வாரத்திலேயே படத்தையும் துவங்கி விட்டார்கள். இந்த படத்தில் மஸ்தான் கதாபாத்திரத்தில் சிவகுமார் ராஜு நடித்துள்ளார். இவர் நிறைய குறும்படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். இவருக்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் பிரபலமான இன்னொரு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம்.
எனக்கு என்டே கிடையாது படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி ஆனால் கடைசி நேரத்தில் இவரே நடிக்கட்டும் என முடிவெடுத்தோம். இந்த படத்திற்கு பாடல்கள் சிச்சுவேஷன் சொல்வதற்கு பதிலாக முழு படத்தின் கதையும் சொன்னேன். பாடலாசிரியர் ஸ்ரீனி அதற்கு ஏற்றார்போல அருமையான பாடல்களை எழுதிக் கொடுத்தார். இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகி ஏன் கலந்து கொள்ளவில்லை என்றால், அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்தியன் 2, கேப்டன் மில்லர் என பெரிய படங்களில் அவர் பிசியாக இருக்கிறார்" என்று கூறினார்.
இதையும் படிங்க:"நிகழ்ச்சியை நடத்தவா வேணாமா".. இறைவன் பட முன்னோட்ட நிகழ்ச்சியில் டென்ஷனான விஜய் சேதுபதி!