தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு... 30ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்! - employment opportunity for educated students at Open University

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 30ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

placement for open university students
திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

By

Published : Nov 26, 2019, 9:32 PM IST

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து துணைவேந்தர் பார்த்தசாரதி கூறுகையில், ‘தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு - பயிற்சித் துறை இணைந்து வரும் 30ஆம் தேதி சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில், சுமார் 30 கம்பெனிகள் கலந்துகொண்டு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்குத் தேர்வு செய்ய உள்ளனர். இவர்களுக்குச் சராசரியாக ரூ. 20 ஆயிரம் வரை சம்பளமாகக் கிடைக்கும்.

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

முகாமில் கலந்து கொள்ள எந்த வித கட்டணமும் வசூல் செய்யப்படாது. அவர்கள் www.tnou.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு படித்து பட்டம் பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள வருபவர்கள் தங்களின் விண்ணப்பம், அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகல், புகைப்படம், ஆதார் அட்டை போன்றவற்றைக் கொண்டு வரவேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: விமானத்தில் சுறா மீன்களின் வால், செதில் கடத்தியவர் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details