இம்மாதம் 15ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஜூலை) 14ஆம் தேதி வரையில், ஆன்லைன் மூலமாக பணியாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஆணையத்தின் (www.aai.aero) அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக இந்தத் தேர்வில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு.. விவரம் உள்ளே...! - ஜூனியர் எக்சிகியூட்டிவ்
சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் 400 காலி இடங்களுக்கு, ஏா் டிராபிக் கண்ட்ரோல் எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு பணியாளர்களை தோ்வு செய்யும் பணியை விமான நிலைய ஆணையம் தொடங்கியுள்ளது.
![விமான போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு.. விவரம் உள்ளே...! field of aviation](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15501959-thumbnail-3x2-job.jpg)
விமான போக்குவரத்து
தேர்வுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த குறையை போக்கும் விதத்தில் இந்த தேர்வில், தமிழ்நாட்டை சோ்ந்த இளைஞர்கள் அதிக அளவில் தேர்வாக வேண்டும் என்று விரும்புவதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிங்க: சமூக ஊடக விதிகளில் ஜூலைக்குள் திருத்தம்