சென்னை:சத்தியபாமா வேலை வாய்ப்பு முகாம் 2022 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் பணி ஒதுக்கீட்டு ஆணைகளை நிறுவனத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன், துணை தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி ஆகியோர் வழங்கினர்.
காஃக்னிசன்ட் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ரமேஷ் தனக்கோட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் சிறப்புரை ஆற்றினார். வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்த மாணவர்களில் 92.14 சதவீதம் மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் பணியமர்த்தப்படுகின்றனர். இதுவரை மொத்தம் 2004 பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
2022-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 363-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து கல்லூரிக்கு வருகைபுரிந்து தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், தளவாடங்கள், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணி நியமனங்களை வழங்கியுள்ளன.