சென்னை: பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணிபுரிவதற்கான வழிமுறைகளை சென்னை மாநகர போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதில், "பணிமனைக்கு உள்ளே வரும் பேருந்துகள் 5 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும்.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிக்கு வரும் போக்குவரத்து பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேருந்திற்குள் welding பணி செய்திடும் போது கட்டாயம் battery wire துண்டிக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப பணிகளுக்காக பேருந்துகள் பணிமனைக்குள் இயக்கிடும்போது, ஓட்டுனர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் பேருந்தை இயக்கக் கூடாது.