சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”கரோனா வைரஸ் காற்றை விட வேகமாக ஊடுருவி 175 நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் வேலையில்லாமல் இருக்கும் விவசாயக் கூலித்தொழிலாளர்கள், ஆலைத்தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணமாக மூன்று ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.
கரோனா: ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 3 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தல் - vaiko interviews
சென்னை: கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்படும் ஏழைக் குடும்பங்கள், தொழிலாளர்களுக்கு மூன்று ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மதிமுக பொது செயலாளர் வைகோ
கிருமி நாசினிகள், கையுறைகள் போன்றவற்றை போர்க் கால அடிப்படையில் தயாரிக்க வேண்டும். நாடு முழுவதுமுள்ள சிறைக் கூடங்களில் இருக்கும் சிறிய குற்றவாளிகளை விசாரணையின்றி விடுவிக்க வேண்டும். என்னுடைய ஒரு மாத ஊதியத்தை கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: 6 புதிய தொழிற்பூங்காக்களில் 2,934 கோடி ரூபாய் செலவில் நவீன உள்கட்டமைப்பு!
Last Updated : Mar 24, 2020, 7:45 PM IST