சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு (BVSc & AH) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (பிடெக்) (உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு) ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து செப்டம்பர் 9ஆம் தேதிமுதல் அக்டோபர் 8 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தகுதிபெற்றவர்களின் பட்டியல்
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு (கலையியல் பிரிவு -BVSc AH (Academic)) பிரிவில் 22 ஆயிரத்து 240 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 21 ஆயிரத்து 899 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு (தொழிற்கல்வி BVSc AH (Academic) பிரிவில் 248 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில், 245 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
பி.டெக். (உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு) ஆகியவற்றிக்கு நான்காயிரத்து 410 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் நான்காயிரத்து 315 பேர் தகுதிபெற்றுள்ளனர்.