தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொது நூலகங்களில் வைஃபை.. மின் நூலக சேவை தொடக்கம்! - WIFI on government public library

தமிழ்நாட்டில் உள்ள 500 பொது நூலகங்களில் வைஃபை வசதி மூலம் மின் நூலக சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

பொது நூலகங்களில் வைஃபை.. மின் நூலக சேவை தொடக்கம்!
பொது நூலகங்களில் வைஃபை.. மின் நூலக சேவை தொடக்கம்!

By

Published : Jan 30, 2023, 1:18 PM IST

தமிழ்நாட்டில் உள்ள 500 பொது நூலகங்களில் வைஃபை வசதி மூலம் மின் நூலக சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

சென்னை:அசோக் நகர் பொது நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வைஃபை வசதி மூலம் மின் நூலக சேவையை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது 2021 - 2022 மற்றும் 2022 - 2023ஆம் ஆண்டு கல்வித்துறை மானிய கோரிக்கையில், கிராமப்புற நூலகங்களில் மின் நூலக சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, பொது நூலகங்களை நாடி வரும் வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 500 நூலகங்களில் இலவச வைஃபை வசதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 24 லட்சம் மதிப்பீட்டில் நூலகங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நகர்புற நூலகங்கள் மட்டுமல்லாமல், கிராமப்புற நூலகங்களில் மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையிலும், சர்வதேச அளவிலான நூல்களை படித்து தெரிந்து கொள்ளும் வகையிலும் மின் நூலக வசதி 500 நூலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து நூலகங்களிலும் மின் நூலக வசதி ஏற்படுத்தி தரப்படும். இதன் மூலம் அமேசான் உள்ளிட்ட சர்வதேச நூல்களையும், தமிழ் இணைய கல்வி கழகத்தின் மூலம் பல்வேறு நூல்களையும் மின் நூலகத்தில் படித்து தெரிந்து கொள்ள முடியும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:'96' பட பாணியில் அழகிய சந்திப்பு.. அரசு பள்ளிக்கு அள்ளி வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details