சென்னை:பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன்.27) வெளியானது. இந்த தேர்வை எழுதிய 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 பேரில், 7 லட்சத்து 59 ஆயிரத்து 856 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.0 7 சதவீதமாக உள்ளது. தேர்வில் மாணவர்களை விட மாணவியர்கள் 10.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். இரண்டாம் இடத்தை விருதுநகர் மாவட்டம் 95.54 சதவீதம் பெற்றுள்ளது. மதுரை மாவட்டம் 95.25 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர் ஒரு மாணவர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். பதினோராம் வகுப்பு தமிழ் பாடத்தில் 18 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று சாதனை புரிந்துள்ளனர். அரபிக் பாடத்தில் 10 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும், கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய 8 லட்சத்து 15 ஆயிரத்து 442 மாணவர்களில் 7 லட்சத்து 83 ஆயிரத்து 160 பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி சதவீதம் 96.04 எனப் பதிவாகியுள்ளது. தற்போது வெளிவந்துள்ள தேர்வு முடிவுகளில் அந்த ஆண்டைவிட 6% தேர்ச்சி குறைந்துள்ளது.
2605 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர், அதேபோல் 103 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பள்ளி வாரியாக தேர்வு எழுதியவர்களில் அரசு பள்ளிகளில் 83.27 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 91.65 சதவீதமும், தனியார் பள்ளிகள் 99.35 சதவீதமும், இரு பாலர் பள்ளிகள் 90.44 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.90 சதவீதமும், ஆண்கள் பள்ளியில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 78. 48 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முக்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம்
- இயற்பியல் - 94.55 சதவீதம்
- வேதியியல் - 94.42 சதவீதம்
- உயிரியல் - 95.99 சதவீதம்
- தாவரவியல் - 87. 98 சதவீதம்
- விலங்கியல் - 87.96 சதவீதம்
- கணினி அறிவியல் - 98. 90 சதவீதம்
- வணிகவியல் - 88.43 சதவீதம்
- கணக்குப்பதிவியல் - 87. 91 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
100% மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரம்
- தமிழ் மொழிப் பாடத்தில் 18 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
- அரபிக் பாடத்தில் 10 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
- இயற்பியல் பாடத்தில் 7,14 மாணவர்கள்
- வேதியியல் பாடத்தில் 1,38 மாணவர்கள்
- உயிரியல் பாடத்தில் 3,83 மாணவர்கள்
- கணிதம் பாடத்தில் 8,15 மாணவர்கள்
- தாவரவியல் பாடத்தில் 3 மாணவர்கள்
- விலங்கியல் பாடத்தில் 16 மாணவர்கள்
- கணினி அறிவியல் பாடத்தில் 8,73 மாணவர்கள்
- வணிகவியல் பாடத்தில் 8,21 மாணவர்கள்
- கணக்குப்பதிவியல் பாடத்தில் 2,163 மாணவர்கள்
- பொருளியல் பாடத்தில் 6,37 மாணவர்கள்
- கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2,186 மாணவர்கள்
- வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 2,91 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.