சென்னை: ராயபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜான்பேராமணி என்பவர் சொந்தமாக விசைப்படகு வைத்துள்ளார். அதில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சோமேஷ், தலைமையில் ஜெகன், நீலகண்டன், சூரியநாராயணன், காமேஷ், ராஜு, சிவாஜி, பாவையா, அப்பாராவ் பாபு உள்ளிட்ட 11 மீனவர்கள் கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை 16ஆம் தேதி ஆந்திரா மாநிலம் ரம்மையாபட்டினம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று விசைப்படகு இஞ்சின் பழுது ஏற்பட்டு நகர முடியாமல் இருந்துள்ளது.
இதனால் 11 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். உடனடியாக விசைப்படகு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் காற்றின் வேகத்தால் விசைப்படகு மிதந்து நகர்ந்து சென்று வழி தெரியாமல் ஆந்திரா மாநிலத்தை தாண்டி சென்றதால் படகில் இருந்த தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது.