தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சொந்த ஒன்றியங்களில் பணிபுரிய வாய்ப்பு - elementary school teachers to work in their own unions

சென்னை: தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஒன்றியங்களில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

elementary education teacher new offer, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சொந்த ஒன்றியங்களில் பணிபுரிய வாய்ப்பு

By

Published : Nov 13, 2019, 11:11 AM IST

தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சேது ராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஜூலை மாதம் நடைபெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு மாறுதல் பெற்றனர். ஆனால் அவர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை ஏதும் வழங்கப்படவில்லை.

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணிக்கு தகுதி இல்லாதவர்கள் என்றால் பழைய பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய வாய்ப்பாக அவர்களுக்கு வழங்கப்பட்ட மாறுதல் ஆணையை ரத்து செய்திட வேண்டும். மேலும் அவர்கள் மாறுதல் பெற்ற பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடத்தை காலியாக உள்ளது என கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

காலியாக உள்ள நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலம் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்துக்குள் பணிமாறுதல் முடிக்க வேண்டும். அதன் பின்னர் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பணிநிரவல் மூலம் பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் சென்றுள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு கொடுத்து அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த ஒன்றியத்தில் பணியில் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் வாய்ப்பு வழங்கலாம் என அதில் கூறியுள்ளார்.


இதையும் படிங்க: தூக்கில் தொங்கிய சக மாணவனைக் காப்பாற்றிய பள்ளி மாணவன்: எஸ்பி பாராட்டு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details