சென்னை: தமிழ்நாடு அரசு தற்போது விதித்துள்ள மின் கட்டண உயர்வு நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ளது எனப் பல அரசியல் கட்சித்தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக உட்கட்சி சண்டை பற்றி எதற்கு பேசிக்கொண்டு இருக்க வேண்டும். எல்லாம் தானாக முட்டி மோதி ஒரு முடிவுக்கு வந்த பின் பேசலாம். அதிமுகவில் 2 பேரும் நிர்வாகிகளை நீக்குவது மாற்றுவது பற்றி, அந்தக் கட்சித்தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும். சம்பந்தமே இல்லாத என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்'' எனத் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் அதிமுகவில் இருந்தேன்: ''அப்பன்களுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பார்கள் என்று தான் கேள்விபட்டு இருக்கிறோம். ஆனால், கடலில் பேனாவை நட்டு வைப்பதை இப்போது தான் பார்க்கிறோம். இது போன்ற வெற்று விளம்பரங்களால் தான் திமுகவை மக்கள் ஆட்சிப்பொறுப்பில் இருந்து இறக்குவார்கள். கடந்த எடப்பாடி அண்ணன் ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட கோபத்தால் விடியல் ஆட்சி வந்தது. விடியல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.