தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் உயிரிழப்பிற்கு தாங்கள் காரணம் அல்ல - மின் வாரியம் விளக்கம்! - Electricity Board is not the reason for women died

சென்னை : புளியந்தோப்பு பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில், மின்சார வாரியத்தின் தவறு எதுவும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Electricity Board is not the reason for women died
Electricity Board is not the reason for women died

By

Published : Sep 14, 2020, 10:09 PM IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், மின் வாரியத்திற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.

மாநகராட்சி தெருவிளக்கிற்காக இணைக்கப்பட்டிருந்த மின் கம்பியை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த மரணத்திற்கு மின் வாரிய அலுவலர்களின் அலட்சியம் தான் காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள மின் வாரியம், மின் இணைப்புப் பெட்டி வரை மின்சாரத்தை விநியோகம் செய்வது தான் வாரியத்தின் பணி எனவும் விளக்கம் அளித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details