இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துளதாவது, சென்னை மூர்மார்கெட்டில் இருந்து வில்லிவாக்கம் வரையிலும், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலும் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நாளை (மே 5) நடைபெற உள்ளன.
இதனால், மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படுகிறது.
மேலும் அரக்கோணம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருவள்ளூர் முதல் மூர்மார்க்கெட் வரையும், பட்டாபிராம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருத்தணி முதல் மூர்மார்க்கெட் வரையும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ஆவடி வரை இயக்கப்படுகிறது.
வேளச்சேரிக்கு சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2. 00 மணி முதல் ரயில்கள் இயக்கப்படும். அதேபோல், வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை பிற்பகல் 2.10 மணி முதல் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ஃபோனி புயல் காரணமாக திப்ரூகர்-தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளையும், முஷார்பூர்-யஷ்வந்த்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் 6ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.