தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு! - வாக்குச்சாவடி

சென்னை: தாம்பரம் தனியார் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த காவல் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தாம்பரத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
தாம்பரத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

By

Published : Apr 5, 2021, 4:47 PM IST

Updated : Apr 5, 2021, 5:25 PM IST

தமிழ்நாட்டில் நாளை (ஏப்.6) 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரமான விவிபேட் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

அந்த வகையில், தாம்பரம் தனியார் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டி இயந்திரங்களை வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு, அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் தாம்பரத்திலுள்ள 101 வாக்கு மையத்திலுள்ள 576 வாக்குச் சாவடிகளுக்குப் பலத்த காவல் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

இதையும் படிங்க: மதுரையில் 1,330 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!

Last Updated : Apr 5, 2021, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details