தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெற்றிவேல் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கு -  வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! - சென்னை சிறப்பு நீதிமன்றம்

சென்னை: தேர்தல் விதிமீறல் வழக்கில் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேலுக்கு எதிராக, சென்னை சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

Election violation case
Election violation case

By

Published : Jan 6, 2020, 11:21 PM IST

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், பெரம்பூர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அப்போதைய, அதிமுக வட சென்னை மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், தேர்தல் பரப்புரையின் போது, தேர்தல் விதிகளை மீறியதாக ஜெயபால் என்பவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வெற்றிவேல் உட்பட நான்கு பேருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஏ.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, வெற்றிவேல் நேரில் ஆஜராகினார். அப்போது, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை 21ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா, முத்துராமலிங்க தேவர் சிலைகளை அகற்றக்கோரி வழக்கு

ABOUT THE AUTHOR

...view details