சென்னை:நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட உள்ள கட்சிகள் தங்களின் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு எனத் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையமும், தேர்தலுக்கான முன் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் பல வேலைகளை செய்து வருகின்றது.
இந்நிலையில்,நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 33 ஐஏஎஸ் அலுவலர்கள், 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், ”மகேஸ்வரன் ஐஏஎஸ், தக்ஷிணாமூர்த்தி ஐஏஎஸ், லஷ்மி ஐஏஎஸ், அஜய் யாதவ் ஐஏஎஸ், நிர்மல் ராஜ் ஐஏஎஸ் உள்ளிட்ட 33 ஐஏஎஸ் அலுவலர்கள் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சுப்புலக்ஷ்மி, ரத்தினசாமி, சதீஷ் கவிதா, ரேவதி உள்ளிட்ட 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்”என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் விசிகவிற்கு தலைவர் பதவி - திருமாவளவன் முதலமைச்சரிடம் ஆலோசனை