தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினரின் தொகுதிப்பங்கீடு, பரப்புரை ஒருபக்கம், தேர்தல் அலுவலர்களின் அதிரடி வேட்டை மறுபக்கம் என தமிழ்நாடு தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் சிறப்பு பார்வையாளர் (செலவினம்) மது மாகாஜன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (மார்ச் 8) சென்னை வந்தார். இதையடுத்து அவருக்கு அரசு அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர்.