சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேர்தல் அனைத்து மாநிலங்களிலும் இன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற்று முடிந்தது தமிழகத்தில் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை இடமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை முதல் தமிழக காங்கிரஸ் கமிட்டியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாக்களித்தனர். மாலை 4 மணி அளவில் தேர்தல் முடிவு பெற்றது.
தமிழகத்தை பொறுத்தவரை 711 வாக்கில் 659 சென்னை சத்தியமூர்த்தி பவனில் பதிவானது. மேலும் டெல்லி மற்றும் கர்நாடகாவில் 12 வாக்கு என மொத்தம் 671 வாக்கு பதிவானது, அதாவது 93% வாக்குபதிவாகியுள்ளது. 40 உறுப்பினர்கள் தங்களது வாக்கினை செலுத்தவில்லை.