தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா் சாஹூ கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் வேட்புமனுவிற்கு வரும் வேட்பாளர்கள் மூன்று வாகனங்களில் மட்டும் தான் வரவேண்டும் என்றும், வாகனங்களை வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலக அறை அமைந்திருக்கும் பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருவோருடன் நான்கு பேரை மட்டுமே தேர்தல் அறைக்குள் அனுமதிக்க வேண்டும்.