சென்னை வேளச்சேரி தொகுதிக்குள்பட்ட அடையாறு அவென்யூ, இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மூர்த்தி தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், காரில் சீல்வைக்கப்பட்டிருந்த மூன்று பெட்டிகள் இருந்தது தெரியவந்தது. அந்தப் பெட்டிகளில் ஐந்து கோடியே 66 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து கார் ஓட்டுநர் பிரகாஷிடம் நடத்திய விசாரணையில், சிஎம்எஸ் (பணம் மேலாண்மை சேவை) என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில், சென்னை குரோம்பேட்டையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ், நங்கநல்லூர், தாம்பரத்திலுள்ள ஜிஆர்டி நகைக்கடையிலிருந்து ஒப்படைக்கப்பட்ட பணத்தினை அடையாறிலுள்ள வங்கி ஒன்றில் செலுத்துவதற்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது.