சென்னை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்குமென மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் நடந்துவருகின்றன.
இந்நிலையில், உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுகின்றன என்று தேர்தல் ஆணையத்திற்கு தகவல் வந்துள்ளது. அதன்படி உள்ளாட்சி பதவி ஏலம் என்பது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்க கூடிய இந்த பதவிகள் ஏலம் விடப்படுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறு விளைவிக்கும் என்பதாலும், இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.