தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவு!

பதற்றமான, பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில்
வாக்குச்சாவடிகளில்

By

Published : Sep 30, 2021, 1:52 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில், இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த தேர்தல் சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில் இன்று(செப்.30) நடைபெற்றது.

இதில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எ.சுந்தரவல்லி, காவல் துணைத் தலைவர் எஸ் . பிரபாகரன், காவல் உதவி தலைவர் எம்.துரை உள்ளிட்ட ஆணையத்தின் முக்கிய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பதற்றமான, பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்துதல், கூடுதல் காவலர்களை நியமித்தல், சோதனைச் சாவடிகள் அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன .

உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும்

இத்தேர்தலில் அக்டோபர் 6ஆம் தேதி அன்று நடைபெறும் முதலாம் கட்ட வாக்குப்பதிவின்போது 17 ஆயிரத்து 130 காவல் துறையினர், 3 ஆயிரத்து 405 ஊர்க் காவல் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அக்டோபர் 9ஆம் தேதி அன்று நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது 16 ஆயிரத்து 6 காவல் துறையினர், 2 ஆயிரத்து 867 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 39 ஆயிரத்து 408 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு பின்னரும், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு பின்னரும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத வெளியிலிருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் அந்த உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நெல்லையில் நள்ளிரவு சைக்கிளில் ரோந்து சென்ற எஸ்பி: காவலர்கள் உற்சாகம்

ABOUT THE AUTHOR

...view details