தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பு வாக்காளர் தகவல் சீட்டு

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்குப் பதிலாக, வாக்காளர் தகவல் சீட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.

By

Published : Mar 4, 2021, 10:32 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் கூட்டணி, வேட்பாளர்கள் நேர்காணல் என அரசியல் கட்சிகள் தீவிரமான பணியில் ஈடுபட்டுவருகின்றன. அதேவேளையில் தேர்தல் நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மிக தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்குப் பதிலாக, வாக்காளர் தகவல் சீட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு

வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு நாள், நேரம், உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என்றும், மேலும் வாக்காளர் பதிவுச்சீட்டில் இம்முறை வாக்காளர் புகைப்படம் இடம்பெறாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு, தகவல் சீட்டுகளை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details